திங்கள், 17 ஆகஸ்ட், 2009

சென்னையில் தடை இல்லா போக்குவரத்து





பொதுவாக எல்லா பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிழற்குடையின் கீழ் நின்று பயணம் செய்வதில்லை. பெருந்தை எப்படியவது பிடித்து விட வேண்டும் என்பதற்காக சாலைக்கே வந்து நின்று கொள்கிறாற்கள். சாலையின் பெரும்பகுதியை பயணிகள் அடைத்துக் கொள்வதாள் பெருந்த்தை சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டி உள்ளது. சாலை குறுக்கிடுவதால் பின்னால் வரும் வாகணங்கள் விரைவாக சாலையை கடக்க முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. இதே நிலையை ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் நாம் கண்கூடாக காணலாம். பெருந்து நிறுத்தத்தில் சிலர் கடை வைத்து இருப்பர், சிலரோ வண்டியை நிறுத்தி இருப்பர், சிலரோ தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வர். இவர்களைக் கட்டுப்படுத்த காவலர் தேவைப் படுவார்.காவலர் சென்றவுடன் இப்பிரச்சினை தொடர்கதையாகும்.. காவலர் அவசியம் இல்லமலே சுயமாக இப்பிரச்சனைக்கு தீர்வு கண இதோ ஓர் எளிய வழி..

எல்லா பெருந்துகளிலும் முதல் படிக்கட்டை நீக்கிவிடவேண்டும். முதல் படிக்கட்டின் உயரத்திற்கு (அதாவது ஒரு அடி அதிமாக) பிளாட்பாரம் அமைத்துக் கொள்ளவேண்டும். பயணிகள் ஏற இறங்க வசதியாக பிளாட்பாரம் நீளமாகவும் அகலமாகவும் இருக்க வேண்டும். முதல் படிக்கட்டு இல்லாததால் பெருந்தில் ஏற இறங்க பயணிகள் நிச்சயமாக பிளாட்பாரத்தில்தான் நின்றாக வேண்டும். அதே நேரம் பயணிகளை இறக்கிவிட பேருந்து பிளாட்பாரம் அருகில் வந்தால்தான் முடியும். பயணிகள் பிளாட்பரத்தை மட்டும் பயன்படுத்துவதல் பேருந்தை பிளாட்பாரத்தை ஒட்டி நிறுத்த ஏதுவக இருக்கும். பேருந்து நின்று செல்லும் இடம் உறுதியானதால் அங்கே கடைகள் போடவோ, வண்டிகள், ஆட்டோக்கள் நிறுத்தவோ நூறு சதவிகிதம் வாய்ப்பில்லை. இத்திட்டம் தடை இல்லா சாலை போக்குவரத்திற்கு வழிவகுக்கும். இப்படிப்பட்ட இடங்களில் காவல்துறையின் சேவை தேவை இருக்காது.

பேருந்த்தில் படிக்கட்டு ஒன்று குறைவதால் விரைவாக ஏறி இறங்கலாம். சாலை சந்திப்புகளில் மக்கள் ஏறி இறங்க வாய்ப்பு இல்லை. கண்ட இடங்களில் எல்லாம் கையைக் காட்டி பேருந்த்தினுள் ஏற முடியாது. ஒட்டுனருக்கும், பயணிகளுக்கும் சுய கட்டுப்பாட்டை உருவாக்கும்.

மாற்றுக் கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

கொசு இல்லா கூவம்






ஒரு அங்குல பைப்பில் ஒடும் தண்ணிரை மூண்று அங்குல அகலம் உள்ள கால்வாயில் விடும் போது அந்த தண்ணிர் தேங்காமல் ஒடுவதாக வைத்துக் கொள்வோம். அதே தண்ணிரை 10 அடி அகலம் கொண்ட கல்வாயில் விட்டால் தண்ணிர் ஒடுவதற்கு பதிலாக தேங்கி மெதுவக செல்லுமல்லவா??. ஆக ஆற்றில் கலக்கபடும் கழிவு நீரின் அளவும், ஆற்றின் அகலமும் 1:3 என்ற விகிதத்தில் இருந்தால்தான் கழிவு நீர் வேகமாக ஓடி கடலில் கலக்கும். நடைமுறையில் பார்த்தால் கலக்கும் கழிவு நீருக்கும் அதன் அகலத்திற்கும் உள்ள விகிதம் கிட்டதட்ட 1;30 என்றிருகிறது. எனவேதான் கழிவு நீர் மெதுவக சென்று கடலில் கலக்கிறது. கழிவு நீர் கலப்பதால் கொசுவும் உற்பத்தியாக ஏதுவாகிறது. அரசும் கொசுவை ஓழிக்க நடவடிக்கை மேல் நடவடிக்கை எடுத்தும் பலன் இல்லை. இதற்கு தீர்வுதான் என்ன???

கூவம் ஆற்றை எடுத்துக் கொள்வோம். ஆற்றின் இரு கரைகளையும் ஒட்டினால் போல் கழிவு நீரின் அளவுக்கு ஏற்ப கால்வாய் அமைத்துக் கொள்ள வேண்டும். துவக்கத்தில் சிறியதாகவும் கடலை நெருங்க நெருங்க கால்வாயின் அளவு கழிவு நீரின் அளவிற்கேற்ப பெரிதாகவும் அமைதுக் கொள்ள வேண்டும். கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் பக்கவாட்டிலேயே சென்று விடுவதால் ஆற்றின் நடுப்பகுதி சுத்தமாக காணப்படும். மழைக்காலங்கலில் அல்லது மழை பெய்யும் பொழுது பக்கவட்டு கால்வாய் நிரம்பி வழிந்து மழை நீரும் கழிவு நீரும் ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து வேகமாய் ஓடி கடலில் கலக்கும்.மழை நின்றவுடன் கழிவு நீர் பக்க கால்வயில் வழக்கம் போல் ஓடி கடலிலும்,ஆற்று நீர் அடுத்த சில வாரங்களில் வெயிலால் உறிச்சப்பட்டு வற்றி சுத்தமாகவும் காணப்படும்.

சென்னை மக்கள் வெளியேற்றும் கழிவு நீர் ஆற்றின் கொள்ளளவை விட கிட்டதட்ட 30 மடங்கு குறைவு தான். மழைக் காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் சுமந்து செல்ல வேண்டும் என்பதால் ஆற்றின் அகலம் அதிகமாக தேவை. கழிவு நீர் பக்கவாட்டிலும் எரியில் இருந்து வெளி வரும் நல்ல நீர் நடுவிலும் சென்று கடலில் கலக்குமாறு செய்திடலாம். இங்கு நல்ல நீர் மக்களின் பயன்பாட்டிற்கும் கழிவு நீர் கடலுக்குமாக பிரிந்து விடும். தேவை எனில் கடலில் கலக்கும்முன் சுத்தப்படுத்திக் கொள்ளலாம் இதே முறையை பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றிலும் பின்பற்றி மருந்து தெளிக்காமல் கொசு தானாக ஒழிந்து விடும். மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கை பெருமளவு குறையும் என்பதில் ஐயமில்லை. கொசுவிலிருந்து மக்களை காப்பாற்றிய தமிழக அரசை நிச்சயமாக இவ்வுலகம் பாராட்டும்.

கீழே கொசு இல்லா கூவத்தின் மதிரியை இனைத்துள்ளேன்.